விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த திமுக எம்.எல்.ஏ.வுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மக்களவை தொகுதி அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரத்தில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக் தாகூருக்கு ஆதரவாக அருப்புக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் திமுக நகராட்சி சேர்மன் சிவப்பிரகாசம் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது, அவர்களிடம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்று புகார் தெரிவித்த பொதுமக்கள், சரமாரியாக கேள்வி எழுப்பினர். பதில் கூற முடியாமல் திணறிய கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Discussion about this post