சேலம் அருகே அரசுப் பள்ளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஊர்வலமாக சென்று சீர்வரிசையாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 243 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவிகளோடு, இப்பள்ளியை தரம் உயர்த்தும் பணியில் ஆசிரியர்களும், மாணவ மாணவியரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், பள்ளிக்கு தேவையான புத்தகங்கள், பென்சில் போன்ற அத்தியாவசிய பொருட்களை மேள வாத்தியம் முழங்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கல்விச் சீராக வழங்கியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்தால், தனியார் பள்ளி மாணவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post