சில்லறை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், 3 கோடி சில்லறை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் என்றும் குறிப்பிட்டார்.
ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டும் இதற்கு போதுமானது என்றும், இந்த திட்டத்திற்கு பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பார்வை குறைந்தவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒரு ரூபாய், 2 ரூபாய் , 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் காயின்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Discussion about this post