இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில், இருப்புப் பாதை அனைத்தும்,100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், 8-வது உலக எரிசக்தி கொள்கை மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஒட்டுமொத்த ரெயில்வே நெட்வொர்க்கையும் மின் மயமாக்குவதை நோக்கி ரயில்வேத்துறை செயல்பட்டு வருகிறது எனவும் தற்போது, ரயில்வே இருப்புப்பாதைகளை 55 சதவீத மின்மயமாக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில், 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு விடும் எனவும், மற்ற நாடுகளும் இதை பின்பற்ற இது முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும், எரிசக்தி துறையில் முதலீடுகளை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், எரிசக்தி துறையில் செய்யும் முதலீடுகளுக்கு குறைந்த அளவிலான 15 சதவீத வருமானவரி விதிப்புக்கு தகுதி பெறலாம் எனவும் கூறினார்.
Discussion about this post