டோக்கியோவில் இன்று நடைபெறவுள்ள பாராலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியாவின் 5 விளையாட்டு வீரர்கள் உட்பட 11 பேர் கலந்து கொள்கின்றனர்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில்164 நாடுகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள், 22 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்த 54 பேர் 9 போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ள டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் துவக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் மாரியப்பன் தங்கவேலு, வினோத் குமார், தேக் சந்த், ஜெய்தீப், சகீனா கதூன் ஆகிய 5 வீரர்களும், 6 அலுவலர்களும் பங்கேற்கின்றனர். ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்ற தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு, அணிவகுப்பின்போது தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post