தூத்துக்குடி உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் உப்பாற்றில் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லையை சேர்ந்த முத்துராமன் மனு தாக்கல் செய்தார். 3 லட்சத்து 52 ஆயிரம் டன் கழிவுகளை ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியிருப்பதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு உத்தரவிட்டனர். மேலும் ஆலை கழிவுகளால் உப்பாற்றில் ஏற்பட்ட சீர்கேடுகளை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Discussion about this post