டெல்லியில் இன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவிற்கு எதிராக களம் கண்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. இந்தநிலையில் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக டெல்லியில் எதிர்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறும் என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. வரும் 6ம் தேதி கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கூட்டத்தில் பங்கேற்காததால், இன்று மாலை நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post