மக்களவைத் தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவாகியுள்ளன.
நடப்பு மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 3-ம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி, மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகியவையும் மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தலை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Discussion about this post