கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். சிதம்பரத்தை அடுத்த சி. முட்லூர் பகுதியில், 24 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்தது. இதைத் தொடர்ந்து 19 கோடி ரூபாய் மதிப்பில் நீதிமன்ற கட்டடமும், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டடங்களும் கட்டப்பட்டன.
அதனை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆட்சியர் அன்புச்செல்வன், காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post