சபரிமலை பயணத்துக்கு, தற்போதுள்ள மூன்று விதமான முன்பதிவு நடைமுறைகள் மாற்றப்பட்டு, ஒரே முன்பதிவு முறை ஏற்படுத்தப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு செல்பவர்கள், பயணம், தரிசனம், அறை முன்பதிவு போன்றவற்றிற்கு, தனித் தனியாக முன்பதிவு செய்து வந்துள்ளனர். இந்த நடைமுறை மாற்றப்பட்டு, அனைத்திற்கும் ஒரே விதமான முன் பதிவு என்ற திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். மேலும், வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கு, நிலக்கல் மற்றும் பம்பையில், தேவசம்போர்டு சார்பில் முன்பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சபரிமலைக்கு எத்தனை பேர் வருகின்றனர் என்பதை அறிய முடியும் என கூறினார். மேலும் முன்பதிவு கட்டாயம் என்பது உடனடியாக அமலுக்கு வராவிட்டாலும், நாளடைவில் அது கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post