தமிழகத்திலேயே உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சென்னை மாநில கல்லூரியின் 180ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினர். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பழகன் இவ்வாறு கூறினார்.
Discussion about this post