அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வருவதையொட்டி அணு செறிவூட்டலில் ஈடுபடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளதையடுத்து வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2015ம் ஆண்டு இந்தத் தடைகள் நீக்கப்பட்டு ஈரானில் அணு ஆயுதப் பரவலை கண்காணிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திலிருந்து ஏற்கனவே அமெரிக்கா விலகிவிட்ட நிலையில் இன்னும் 10 நாட்களில் இந்த ஒப்பந்தமானது முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து அணு செறிவூட்டலை 20 சதவீதம் அதிகப்படுத்த உள்ளதாக ஈரான் அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் மீண்டும் அணு ஆயுத தயாரிப்பு சோதனையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதால் வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு பிரான்சு மற்றும் ஜெர்மன் நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளன.
Discussion about this post