இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அங்கிருந்து நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையாதிகாரிகள் கூறியுள்ளனர். 25-ந்தேதிக்கு பிறகே அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும் என்றும், தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் மாவட்டங்களில் கன மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post