வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
Discussion about this post