அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை இன்று புயலாக வலுப்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வடமேற்கு திசையில் ஒரிசா மற்றும் மேற்குவங்க கடற்கரையை நோக்கி புயல் நகரக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தப் புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய புயலுக்கு புல் புல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் இன்றும் நாளையும் மத்திய வங்கக் கடல், ஆந்திர கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புல் புல் காரணமாக நாகப்பட்டிணம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க செல்வதற்கானஅனுமதி சீட்டு வழங்குவதற்கு மீன்வளத்துறை தடை விதித்துள்ளது