நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய உதவிடும் வகையில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையால் வேளாண் துறை வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார்.
எந்த ஒரு நாடும் தனித்திருந்து வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்று கூறிய சுரேஷ் பிரபு, பிற நாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதற்கு ஏற்றார்போல் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய உதவிடும் வகையில் புதிய தொழில் கொள்கை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post