ராமநாதபுரத்தில் 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கீழ்மட்ட நீர்த்தொட்டிகள் அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த மேலக்கிடாரம் ஊராட்சியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் கண்மாய், கிணறுகளில் சுரக்கும் சிறிய அளவிலான நீருக்காக நாள் முழுவதும் காத்திருந்து குடிநீர் எடுத்து வரும் நிலை இருந்ததால் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு 18 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி, ஆழ்துளை கிணறுகள் அமைத்து கீழ்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post