நீட் தேர்வு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக ஆயிரத்து 597 பயனாளிகளுக்கு 20 கோடியே 53 லட்ச ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை துணை முதலைமச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Discussion about this post