தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011 ம் ஆண்டு அனுமதி அளித்தது.

இதனையடுத்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் பரப்புக்கு சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை ஆர்.எஸ் ரத்தோர் மற்றும் சத்தியவான் சிங் கர்பயால் அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இருதரப்பினரும் தங்களது வாதங்களை தொடர்ந்து முன்வைத்து வந்தனர். நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாகவும், இந்த திட்டம் தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிட்டது.

வாத பிரதிவாதங்கள் இன்று முடிந்த நிலையில், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Exit mobile version