விழுப்புரத்தில் படை வீரர்களுக்கான நிதியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 7 ம் தேதி படை வீரர் கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன் படி இன்று படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில்
நடைபெற்றது.
இதில், 2 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதியை வழங்கிய மாவட்ட ஆட்சியர், நிதி வசூல் செய்தவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். படை வீரர்களுக்கான நிதியை மாவட்ட ஆட்சியரிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
Discussion about this post