கிளிமஞ்சரோ மலை..! கனிமஞ்சரோ..!!
மலை ஏறுதல் என்பது அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றுதான். அதில் சிலர் மற்றும் மலை ஏறுவதை லட்சியமாகவும் கனவாகவும், நினைப்பார்கள். மலையேறுதல் என்றதுமே அனைவருக்கும் நியாபகம் வருவது இமயமலை மட்டும் தான். ஆனால் மலையேறுபவர்களின் லட்சிய கனவாக இருப்பது கிளிமஞ்சரோ மலைத் தொடர் தான். இந்த மலையானது டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான மலை ஆகும். இந்த கிளிமஞ்சரோ மலையானது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எல்லா மலைகளை காட்டிலும் மிக உயரமான மலையும் இதுதான். மற்ற உயரமான மலைத்தொடர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு மலைத் தொடரின் அங்கமாகதன் இருக்கும். உலகின் புகழ் பெற்ற ஏழு மலைகளில் கிளிமஞ்சரோ மலையும் ஒன்றாகும். இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5895 மீட்டர் ஆகும். கிளிமஞ்சாரோ ஒரு ராட்சஸ பல அடுக்குகள் கொண்ட எரிமலை ஆகும். சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கி வழிந்த எரிமலைக் குழம்பால் உருவானது தான் கிளிமஞ்சரோ மலை. இந்த கிளிமஞ்சரோவின் மலைக்கு ‘வெள்ளை மலை’ என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.
சாதனைப் படைத்த ’8’ வயது சிறுமி:
1889-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹான்ஸ் மேயர் மற்றும் ஆஸ்திரியாவின் லுட்விக் புர்ட்ஷெல்லர் ஆகியோரின் துணையோடு கிளிமஞ்சாரோ மலையில் முதன்முதலாக ஏறி சாதனை படைத்தார். இவர்களை தொடர்ந்து பலர் இந்த மலையில் ஏற வேண்டும் என கனவு காண்பார்கள். அந்த கனவை நிஜமாக்கியவர் தான் பெங்களூரை சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆதியா. கர்நாடக மாநிலம் ஹர்ஷா பென்னுார் இவர்களின் குழந்தையான ஆதியாவிற்கு எட்டு வயதாகிறது. இவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். ஆதியா அவரின் தந்தை ஹர்ஷாவுடன் சேர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சான்யாவில் உள்ள கிளிமஞ்சரோ சிகரத்தில் ஏழு நாட்களில் ஏறி சாதனை படைத்துள்ளனர் ஆதியா என்ற எட்டு வயது சிறுமி. ஆதியா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் செலவளித்து மலையேறி உள்ளார் என்கின்றார் அவரின் தந்தை ஹர்ஷா.
இந்த மலையேறுவதில் ஆர்வம் வந்ததிற்கு காரணம் இவரது தந்தை தான் என்று ஆதியா தெரிவித்தார். ஏனெனில் இவரது தந்தை ஏற்கனவே கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள் தான். அவர்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்கள் என்பது அவர் அவரின் விருப்பம் சார்ந்தது. நாம் வெற்றிபெற வேண்டுமானல் முயற்சி முக்கியம் அந்த முயற்சி தான் ஆத்யாவை கிளிமஞ்சரோ மலையை ஏறவைத்தது. வரும் காலங்களில் நாம் நிறைய ஆதியாக்களை சந்திக்க உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார் ஆதியா. அந்த சிறுமிக்கு வாழ்த்துகளை நாம் தெரிவிப்போம்!
Discussion about this post