பூமிக்கு மிக அருகில் சந்திரன் வந்து செல்லும் சூப்பர் மூன் எனப்படும் அரிய நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து, மகிழ்ந்தனர்.
சந்திரன் பூமிக்கு 5 ஆயிரத்து 154 கிலோ மீட்டர் அருகில் வந்து செல்லும், சூப்பர் மூன் எனப்படும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது வழக்கமாக தெரியும் சந்திரனின் அளவு, 30 சதவீதம் பெரியதாக தெரியும் என்றும், இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வையொட்டி கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற இந்த அரிய நிகழ்வை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.