கோவையில் வானில் சிவப்பு நிறத்துடன் தோன்றிய நிலவை பொதுமக்கள் ஆர்வத்துடன் படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த ஆண்டில் முதல் சந்திர கிரகணம் தோன்றிய நிலையில் உலகில் பல்வேறு மக்களால் பார்க்கப்பட்ட கிரகணத்தை இந்தியாவில் காண முடியவில்லை. இந்த நிலையில், கோவையில் மாலையில் தோன்றிய சந்திரன் அளவில் மிக பெரியதாகவும், சிவப்பானதாகவும் காட்சி அளித்தது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
Discussion about this post