மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசும் புதுச்சேரி அரசும் கடந்தாண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன. தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகம் அரசும், மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்தன. இந்தநிலையில் மேகேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்தின் திட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளருக்கு கர்நாடக நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கடந்த 18ஆம் தேதி அளித்துள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
Discussion about this post