எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை மாயைக் கூட்டணி என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா , எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது வேறுபட்ட ஒன்று என்றும் இந்த கூட்டணி நிலைக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்ததோடு மெகா கூட்டணி ஒரு மாயைக்கூட்டணி எனவும் விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அமித் ஷா, இந்த முடிவுகளை 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சிவசேனா கட்சி தங்களோடு கூட்டணியில் இருக்கும் என்று கூறிய அவர், இதுதொடர்பாக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Discussion about this post