நம் நாடு சுதந்திரம் அடைந்து இன்றோடு 73 ஆண்டுகள் ஆகிறது. சுதந்திரக் காற்றை சுவாசிக்க காரணமான தியாகிகள்
1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. நமது இந்தியா சுதந்திரமடைந்து, இன்றோடு 73 வருடங்கள் ஆகிறது ,
மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. பின்னர், வர்த்தகம் என்ற பெயரில், பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியது. ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்த முற்பட்டனர். போராட்டம் நாடெங்கும் வெடித்தது.
தமிழகத்தில் வாஞ்சிநாதன், சிவகுரு, திருப்பூர் குமரன் என பலரும் உயிர்தியாகம் செய்தனர் சுதந்திர போராட்டத்தில் சுபாஷ்சந்திர போஸ் பங்கு முக்கியமானது. இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து ஒவ்வொரு இளைஞனையும் தனது சீறிய பேச்சால் சுதந்திரபோரில் பங்கு பெற செய்தார்
1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக 1921ம் ஆண்டு காந்தி தேர்ந்தெடுக்க பட்டார்.
1930ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டாம் சரித்திரத்தில் பெரும் நிகழ்வாக அமைந்தது. இதன் காரணமாக கைது செய்யபட்டாலும் சிறைவாசத்திற்கு பிறகு 1942ல் நடைபெற்ற வெள்ளையனேவெளியேறு இயக்கத்திலும் பங்கு பெற்றார் காந்தி. இது போன்ற பல போரட்டங்களின் முடிவில் 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடக மலர்ந்தது
72 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ள இந்தியா உலக அரங்கில் இன்று நிமிர்ந்து நிற்கிறது.
Discussion about this post