மனிதனின் பல்வேறு சாதனைகளில் ஒன்று நிலவுக்கு சென்று வந்தது ஆகும். இன்றளவும் அதை நாம் பெருமையாக கூறிக்கொள்கிறோம். ஆனால் மனிதன் நிலவுக்கு போனதாக சொன்னது பொய் என யாராவது திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த சம்பவத்தை நம்புவதா? வேண்டாமா? என்றுதான் சிந்திக்க தோன்றும்.
நிலவுக்கு மனிதன் போய் வந்ததை பொய் என ஒரு தரப்பினர் சொல்லிக்கொண்டு தான் வந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற வீடியோ வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் 1966க்கும் 72க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது
அந்த வீடியோவில் காட்சிகளை படம் பிடிக்க சிலர் தயார் நிலையில் இருப்பது தெரிகிறது.ஒரு விண்வெளி வீரர் அமெரிக்க கொடியை நடும்போது ரெடி, ஆக்சன் என்று கூறும் குரலும் பதிவாகியுள்ளது.இன்னொரு காட்சியில் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் விண்கலத்தை நோக்கி செல்லும்போதும் ரெடி, ஆக்சன் என்று கூறும் குரல் ஒலிக்கிறது.
இந்த காட்சிகள் உண்மையானவை என்று வீடியோவை வெளியிட்டவர்கள் கூறியுள்ளனர். அந்த காலகட்டத்தில் ,ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் விண்வெளியில் யார் பெரியவர் என்று கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது ரஷ்யாவை முந்திக்கொண்டு , நாங்கள் நிலவுக்கு சென்று விட்டோம் என அமெரிக்காவின் நாசா மார்தட்டியது.
இப்போது வெளியான இந்த வீடியோ, இரு நாடுகளின் போட்டிக்கு இடையில், நிலவுக்கு போய் வந்ததாக அமெரிக்கா பொய் சொல்லி விட்டதோ என பலரையும் யோசிக்க வைத்துள்ளது
Discussion about this post