அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – மெலனியா டிரம்ப் தம்பதி வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். இவர்களுடன் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் குஷ்னரும் இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் இருவருமே அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகர்களாவர். அதிபரின் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில், அதிபருடன் அவர்களும் இந்தியா வருகை தருகிறார்கள். அமெரிக்க அதிபருடன் உயர்மட்டக் குழுவும் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி உணவு உண்ணுவதற்காக தங்க-வெள்ளி பாத்திரங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.ஜெய்ப்பூரின் வடிவமைப்பாளர் அருண் பக்வால் 3 வாரங்களில் இதை தயார் செய்துள்ளார்.மேலும் அவர்களின் காலை மற்றும் இரவு உணவுக்காக ’ராயல் தாலி ‘வகையை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளனர்.’’அதிதி தேவோ பாவா” என்ற பாரம்பரியத்தை பின்பற்றி அமெரிக்க அதிபருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.