சென்னை அயனாவரத்தில் உள்ள வீடு ஒன்றில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவான பணிப்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி ஸ்ரீரங்கா மற்றும் அஞ்சனா. இவர்களது வீட்டில் கடந்த 6 வருடங்களாக வீட்டுப் பணி பெண்ணாக சலோமியா என்ற பெண் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 2ஆம் தேதி கணவர் மனைவி இருவரும் தங்களது மகனை சந்திக்க வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, 30ஆம் தேதி வீடு திருப்பியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த தங்க வளையல், செயின் உட்பட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், வெளிநாட்டிற்கு செல்லும் போது பீரோவின் சாவியை பணிப்பெண்னிடம் கொடுத்து விட்டு சென்றதாக கூறி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அயனாவரம் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள பணிப்பெண் சலோமியாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post