புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் இன்று, இரண்டாம் நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குள் தேக்கமடைந்துள்ளது.
மத்திய அரசு கொண்டுள்ள வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளதால், வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 4 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை என லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post