சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் பயணிகள் விரைவு ரயில், பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ரயில் நிலையத்தில், எழும்பூர் – திருச்செந்தூர் பயணிகள் விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினரிடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எழும்பூர் – திருச்செந்தூர் பயணிகள் ரயில், பண்ருட்டியில் நின்று செல்வதற்கான உத்தரவை இந்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இன்று பண்ருட்டி ரயில் நிலையத்துக்கு வந்த எழும்பூர் – திருச்செந்தூர் ரயிலை அப்பகுதி மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர்.
Discussion about this post