தொடரின் வெற்றிய தீர்மானிக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவின் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியை பெறுத்த வரை கடந்த போட்டியில் கே.எல்.ராகுல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால், இந்த போட்டியில் ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
கடைசி போட்டியில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், இந்தாண்டின் முதல் தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா முனைப்பு காட்டி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அது அவரது சர்வதேச ஒரு நாள் போட்டியின் 100 வது விக்கெட்டாக அமையும். சமபலம் வாய்ந்த இரு அனிகள் மோதுவதால் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post