வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு இன்று முடிவடைய உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, இந்த முறை கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்கவும், கூடுதல் அலுவலர்களை பணியில் அமர்த்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்யும் பணிகள் இன்றுடன் முடிவடைந்து, ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக ஏற்பாடுகளை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
Discussion about this post