மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் அனல்மின் திட்டங்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவற்றிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதியை கூடிய விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
டெல்லியின் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கியமாக, சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதலாக இரண்டாயிரத்து 790 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல அனல்மின் நிலைய திட்டங்கள் குறித்த அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைக்கும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Discussion about this post