சென்னை கோயம்பேடு சந்தை, இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற 7 ம் தேதி முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து, காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு, வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post