மேட்டுப்பாளையத்தில் மலைப்பாம்பை விழுங்க முயன்ற ராஜநாகத்தை, வனத்துறை அதிகாரிகள் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் அரிய வகை பாம்பு இனத்தை சேர்ந்த ராஜநாகம் அதிகமாக காணப்படுகிறது. நீர் நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே காணப்படும் ராஜநாகம்,மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு பாக்கு தோப்பு வாய்க்கால் பகுதியில் மலைப்பாம்பை ஒன்றை விழுங்க முயன்று கொண்டிருந்தது. இதனை கண்ட தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் செல்வராஜ் மற்றும் வன உரிமை இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்தனர். இதையடுத்து, ராஜநாகம் மற்றும் மலைப்பாம்பினை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
Discussion about this post