திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் காலை 6.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை காண ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.
மேலும் இந்த கார்த்திகை தீப திருவிழாவிற்காக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தமிழக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post