நளினி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிப்பு

பொதுமக்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடி நிதி பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சாரதா நிதி குழுமத்திற்கு நளினி சிதம்பரம் சட்ட உதவிகளை வழங்கியதாக புகார் எழுந்தது. இதற்காக 1 கோடியே 26 லட்சத்தை அவர் கட்டணமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. ஆகஸ்டு 30ம் தேதி வரை நளினி சிதம்பரத்தை கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Exit mobile version