ஈரோட்டில் ரயில் தண்டவாளங்களை புதியவகை இயந்திரத்தின் உதவியால் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெற்கு ரயில்வே சார்பில் தற்போது ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து திருப்பூர், கோவை மற்றும் கேரளா மார்க்கங்களில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக வரவழைக்கப்பட்ட பி.சி.எம் என்ற இயந்திரத்தின் உதவியுடன் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. ரயில்கள் செல்லும் நேரத்தை கணக்கிட்டு, எதிரெதிர் திசைகளில் இயந்திரங்களை இயக்கி தண்டவாளங்கள் சீரமைக்கப்படுகின்றன.
தண்டவாளங்களில் நாளொன்றுக்கு 400 மீட்டர் தூரத்திற்கு இந்த இயந்திரம்மூலம் சீரமைப்பு பணிகள் நடத்தப்படுகின்றன. ரயில்போல இயங்கும் இந்த இயந்திரத்தை தண்டவாளத்தில் இயக்கி, பழைய கற்களை அப்புறப்படுத்தியும், அவற்றை புதுப்பித்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோல ஈரோடு வழியாக செல்லும் அனைத்து தண்டவாளங்களும் இன்னும் சில மாதங்களில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post