இத்தாலியில் 2ம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டை செயலிழக்கம் செய்யும் பணிகளை தீவிரமாக நடைபெறுகிறது.
இரண்டாம் உலகப்போர் 1939 ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதில் ஜப்பான், நாகசாகி நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்தன.இந்நிலையில் இத்தாலியின் Brindisi நகரில் 2ம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு ஒன்று சமீபத்தில் அங்குள்ள தியேட்டர் ஒன்றின் சீரமைப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரோபோட் மூலம் அந்த குண்டை செயலிழக்க செய்யும் பணியில் இத்தாலி ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அந்நகரில் உள்ள 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல் உள்ளூர் விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவையும் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post