செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் கிராமத்தில், விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விநாயகர் சிலைகள் முற்றிலுமாக இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் வண்ணங்கள் சேர்த்து களிமண்ணால் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் சென்னை,திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Discussion about this post