மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்துவரும் தொழிலாளர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையினர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியாவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள், 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் நீர் புகுந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, மூன்று ஹெல்மெட்டுகள் மட்டுமே கிடைத்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், சுரங்கத்திற்குள் சென்று, சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை இந்திய கடற்படையினர் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post