வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று மாலை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. கஜா என பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் வரும் 15-ம் தேதி தமிழகத்தின் வட கடலோரம் வழியாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கஜா புயல் இன்று மாலை வலுவடையும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
Discussion about this post