மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்புகளால் தேசிய பங்கு சந்தை முதல் முறையாக 39 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 39 ஆயிரத்து 017 புள்ளிகளை தொட்டுள்ளது. இதே போல டெல்லியில் உள்ள தேசிய பங்குசந்தையில் நிஃப்டி, 11 ஆயிரத்து 700 புள்ளிகளைத் தாண்டியது. சென்செக்ஸ் ஒரே நாளில் புள்ளி ஒன்பது இரண்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், லார்சன் & டூப்ரோ, எச்.டி.எஃப்.சி வங்கி, டாடா கன்சல்டன்சி சர்விசஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிகரித்துள்ளன.
மார்ச் மாதம் இறுதி வரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 33 ஆயிரத்து 980 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பிருக்கிறது என கணிப்புகள் வெளியாவதால் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post