தமிழக காவல் துறையில், 5 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக இருந்த சைலேந்திர பாபுவுக்கு, ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு தலைமை இயக்குநராக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநராக பிரதீப் வி ஃபிலிப் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் பயிற்சிப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக இருந்த ஆர்.சி. குடவாலாவுக்கு, தலைமை இயக்குநராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக இருந்த விஜய் குமாருக்கு, சிறப்பு தலைமை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேஷ்குமார், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜன், தருமபுரி காவல் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post