தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு நோய் தொற்று அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்பவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனை செல்பவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுகும் இந்த விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு செல்பவர்களுக்கும் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post