ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு 2வது முறையாக மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவை கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ரத்து செய்து ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தக்கோரி தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரத்தை தரவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாவது முறையாக ஆலையை திறக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post