சென்னை அருகே துணிக்கடையில் புடவை எடுப்பதுபோல் நடித்து, ஒன்றரை லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகளை திருடி சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் 10-வது அவென்யூவில் இருக்கும் துணிக்கடை ஒன்றில், மதியம் 3.40 மணிக்கு 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் துணி எடுக்க கடைக்குள் குழுவாக நுழைந்திருக்கின்றனர். அப்போது குழுவில் வந்த ஆண், கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி உள்ளார். இதையடுத்து புடவைகளை பார்வையிட்ட பெண்களில் ஒருவர் மறைத்து நிற்க, மற்றவர் பையில் சில பட்டுப்புடவைகளை சுருட்டி, தாங்கள் கொண்டுவந்த பைக்குள் மறைத்து வைத்துள்ளார். சிறிதுநேரத்தில் அக்குழுவினர் புடவைகளை வாங்காமல் கடையிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.
துணிகளை மீண்டும் அடுக்கி வைக்கும்போது புடவைகள் குறைந்ததை அறிந்த கடை ஊழியர்கள், உடனடியாக வெளியில் வந்து பார்ப்பதற்குள் மர்ம குழு தம்பியுள்ளது. அதில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான, 15 காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை அக்குழுவினர் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறை சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மக்குழுவை தேடி வருகின்றனர்.
Discussion about this post