ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்ஸ் அரசு முடக்கியது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை விதிக்க ஐ.நா. மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. இதற்கு சீனா தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பின் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.
இது நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் முட்டுக்கட்டை காரணமாக அந்த தீர்மானம் நிறைவேறாமல் போய்விட்டது. இந்த நிலையில், பிரான்சில் உள்ள மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Discussion about this post