தமிழகத்தில் முதல்முறையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரை, 3 ஆயிரத்து 649 கோடி ரூபாய் செலவில், அதிநவீன எக்ஸ்பிரஸ் நான்குவழிச்சாலை அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் தொடங்கியது.
ஆட்சிபட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். கோவையில் இருந்து மதுரை செல்வதற்கு, தற்போது ஐந்தரை மணி நேரம் ஆகும் நிலையில், இந்த சாலைப் பணி முடிந்தவுடன், இரண்டு மணி நேரம் குறையும். எக்ஸ்பிரஸ் சாலைக்கான பூமி பூஜை முடிந்தபின்பு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 2,000 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. பின்னர், பொள்ளாச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான அம்மா திருமண மண்டபம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
Discussion about this post